அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் திங்கட்கிழமை முதல் ‘கருப்பு எதிர்ப்பு வாரத்தை பிரகடனப்படுத்துகிறது

136 Views

புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மற்றும் பல விடயங்கள் தொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் திங்கட்கிழமை முதல் ‘கறுப்பு எதிர்ப்பு வாரத்தை’ அறிவித்துள்ளது.

வரி திருத்தம் தொடர்பாக ‘கறுப்பு எதிர்ப்பு வாரத்தை’ நடத்துவதற்கு மத்திய குழு ஏகமனதாக ஒப்புக்கொண்டதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

மேலும் மருந்துகள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு அரசாங்கத்தை சங்கம் கோரியுள்ளது.

அநியாயமான வரி அதிகரிப்புக்கு எதிராக நாளை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்காவிடின் தொழிற்சங்கப் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply