அவுஸ்திரேலியா: அகதி பெண்களின் சுகாதாரத்தைப் பாதிக்கும் மொழி சிக்கல்கள்

180 Views

229540556 1386063158432755 8359810048014887464 n அவுஸ்திரேலியா: அகதி பெண்களின் சுகாதாரத்தைப் பாதிக்கும் மொழி சிக்கல்கள்

மொழி சிக்கல்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் வசிக்கக்கூடிய இடங்களும் புலம்பெயர் மற்றும் அகதி பெண்களுக்கு சுகாதார சேவைகள் கிடைப்பதை தீர்மானிப்பதாக கூறுகிறார் மருத்துவர் அடேல் முர்டோலோ.

சமூக- பொருளாதார சூழலை முக்கிய காரணமாக குறிப்பிடும் மருத்துவர் அடேல், வீட்டு வாடகை குறைவாக உள்ள உள்புற இடங்களைத் தேடி புலம்பெயர்ந்தவர்கள், அகதிகள் செல்லக்கூடிய நிலை உள்ளதை சுட்டிக் காட்டியிருக்கிறார்.

“கிராமப் புறங்களில் உள்ள புலம்பெயர் மற்றும் அகதி பெண்கள் மொழி பெயர்ப்பாளர் இல்லாததால் மருத்துவ உதவிகள் பெற பல முறை சென்று வரவேண்டியதாக உள்ளது,” என்கிறார் மருத்துவர் அடேல்.

இந்த நிலையில், புலம்பெயர் மற்றும் அகதி பெண்கள் தங்கள் சுகாதாரத்தைப் பாதிக்கக்கூடிய கொள்கை உருவாக்கத்தில் பங்கெடுக்க வேண்டும் என பெண்கள் சுகாதாரத்திற்கான பன்முக கலாச்சார மையம் அழைப்பு விடுத்திருக்கிறது.

“எமது புலம்பெயர்ந்த சமூகம் எதிர்கொள்ளும் இந்த நிலை மனநல விளைவுகளுக்கு வழிவகுக்கும், தாமதமான சிகிச்சைக்கு வழிவகுக்கும், எனவே இந்த ஆராய்வுகள் முக்கியமானவை,” எனத் தெரிவித்திருக்கிறார் அவுஸ்திரேலிய சுகாதாரத்துறை அமைச்சர் கிரேக் ஹண்ட்.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply