கிண்ணியாவில் சேதனைப் பசளை மூலமாக மிளகாய் கறிமிளகாய் அமோக விளைச்சல்

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வட்டமடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சேதனைப் பசளை மூலமாக மிளகாய் கறிமிளகாய் அமோக விளைச்சல் கிடைக்கப் பெற்றுள்ளதாக செய்கையாளர் தெரிவித்தார்.

 

சேதனப்  பசளையினை பயன்படுத்தி சுமார் 2 ஏக்கர் நிலப்பரப்பரப்பில் குறித்த பயிர்ச் செய்கை செய்யப்பட்டுள்ளது. சொட்டு நீர்ப்பாசன நவீன முறை மூலமாக நீர் விரயமாவதை தடுத்து இச் செய்கை பண்ணப்பட்டுள்ளது.

சேதனைப் பசளை மூலமாக மிளகாய் கறிமிளகாய் அமோக விளைச்சல்

கிண்ணியா பகுதியை சேர்ந்த தனி நபரான சமீம் என்பவரே இப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளார். தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அனீஸ் அவர்களின் ஆலோசனைகளை பெற்று பாரிய விளைச்சலினை பெற்றுள்ளதாக விவசாயி இதன் போது தெரிவித்தார்.

சேதனைப் பசளை மூலமாக மிளகாய் கறிமிளகாய் அமோக விளைச்சல்

இரு ஏக்கரில் கால் ஏக்கர் பகுதியில் மாத்திரம் சுமார் 1000 கிலோ கிராம் கறி மிளகாய் மிளகாய் அறுவடை செய்து தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்துக்கு அனுப்பி வருபானமீட்டியதாகவும் தெரிவித்தனர்.

சேதனைப் பசளை மூலமாக மிளகாய் கறிமிளகாய் அமோக விளைச்சல்

எதிர்காலத்தில் இப் பகுதியில் பல ஏக்கர் நிலங்களில் இவ்வாறான பயிர்ச் செய்கையில் ஈடுபட்டால் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பொருளாதார முன்னேற்றங்களையும் கண்டு கொள்ள முடியும் எனவும் இச் செய்கை மூலம் ஒரு கோடியே 20 இலட்சம் ரூபா இலாபமாக மீட்டலாம் என எதிர்பார்ப்பதாகவும் தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் அனீஸ் மேலும் தெரிவித்தார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021