அக்குஸ் கூட்டமைப்பில் இணையவில்லை – யப்பான் மறுப்பு

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய அக்குஸ்(AUKUS) கூட்டமைப்பில் இணையவில்லை என யப்பான் கடந்த வியாழக்கிழமை (14) மறுப்பு தெரிவித்துள்ளது.

சீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த கூட்டமைப்பானது, அவுஸ்திரேலியாவுக்கு அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகளை வழங்கும் உடன்பாட்டை எட்டியிருந்தது. தற்போது கைப்பசொனிக் ஏவுகணையை இணைந்து உருவாக்குவதற்கு இந்த கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.

எனினும் இந்த கூட்டமைப்பில் யப்பானை இணைத்துக்கொள்வது என்ற தகவல்களில் உண்மையில்லை என தெரிவித்துள்ளார் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ஜென் சகி. இந்த கூட்டணியின் திட்டம் என்பது நவீன ஆயுதங்களை வடிவமைப்பதுடன், பிராந்தியத்தின் உறுதித்தன்மையை பேணுவது, அதில் யப்பானை இணைத்துக் கொள்ளும் திட்டமில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டமைப்பில் இணைந்து கொள்வதற்கான அழைப்பு தமக்கு விடுக்கப்படவில்லை என யப்பான் நாடாளுமன்ற செயலாளர் ஹஜரோகாசு மற்சுனோவும் தெரிவித்துள்ளார்.

Tamil News