இலங்கையை தரமிறக்கிய உலகின் நிதித் தரப்படுத்தும் நிறுவனங்கள்

இலங்கையை தரமிறக்கிய நிதி நிறுவனங்கள்

அனைத்துலக நிதித் தரப்படுத்தும் நிறுவனங்கள் இலங்கையை மேலும் தரமிறக்கியுள்ளன. எஸ் அன் பி எனப்படும் நிதித் தரப்படுத்தும் நிறுவனம் இலங்கையை சி.சி.சி என்ற தரத்தில் இருந்து சி.சி நிலைக்கு தரமிறக்கியுள்ளது. இந்த நிரலானது இறுதி நிலையில் இருந்து மூன்றாவது தரமாகும்.

அதேசமயம், பிற்ஸ் எனப்படும் நிதித் தரப்படுத்தும் நிறுவனம் இலங்கையை சி.சி என்ற தரத்தில் இருந்து சி என்ற நிலைக்கு தரமிறக்கியுள்ளது, இது முற்றான வீழ்ச்சிக்கு முதல்படியில் உள்ள நிலையாகும்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார, அரசியல் மற்றும் சமூக உறுதித் தன்மையற்ற நிலையைத் தொடர்ந்து இந்த நிறுவனங்கள் இலங்கையை தரமிறக்கியுள்ளன. வெளிநாட்டு கடன்களை மீளச்செலுத்த முடியாது என இலங்கை அரசு கடந்த செவ்வாய்கிழமை (12) அறிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இலங்கையின் பொருளாதார நிலை மிகவும் உறுதியற்றதாக உள்ளதுடன், அது மக்களை அதிகம் பாதிக்கும் நிலையை எட்டியுள்ளதாக உலக வங்கியின் மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பரிஸ் ஹடாட்சேர்வோ கடந்த புதன்கிழமை (13) தெரிவித்துள்ளார்.

Tamil News