காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடுவோரை அகற்ற உயர்மட்ட ஆலோசனை

போராட்டத்தில் ஈடுபடுவோரை அகற்ற உயர்மட்ட ஆலோசனை

கோட்டா அரசுக்கு எதிராக கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரை அங்கிருந்து அகற்றுவது தொடர்பில் உயர்மட்ட ஆலோசனை முன்னெடுக்கப் பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி செயலகத்தை அண்மித்ததாக காலி முகத்திடல் பகுதியில் இன்றைய (17) தினம் 9வது நாளாக தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபடுவோரை நாளைய தினத்திற்கு (18) பின்னர் அங்கிருந்து அகற்றுவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மட்டத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, நேற்று காலையில் பெருமளவான காவல்துறை வாகனங்கள் காலிமுகத்திடல் பகுதியில் திடீரென குவிக்கப்பட்டு பின்னர் அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தில் ஈடுபடுவோரை அகற்ற உயர்மட்ட ஆலோசனை

இந்நிலையில், காலி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த ‘கோட்டா கோ கம’ கூடாரம் காவல்துறையினரால் இன்று அகற்றப்பட்டுள்ளது.