கோட்டா, மகிந்தவை உள்ளடக்கிய புதிய அமைச்சரவை இன்று பதவிப் பிரமாணம்?

433 Views

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்தவை உள்ளடக்கிய புதிய அமைச்சரவை இன்று மாலை பதவிப்பிரமானம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட்டா அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் பதவி விலகியிருந்த முன்னாள் அமைச்சர்களுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று மாலை விசேட சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

இதன்போது எட்டப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டு உள்ளது.

முன்னர் அமைச்சர்களாக பதவிவகித்திருந்த நாமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, சஷீந்திர ராஜபக்ச ஆகியோர் புதிய அமைச்சரவையில் பதவிகளை ஏற்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ராஜபக்சக்களில் கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகிய இருவரை உள்ளடக்கியதாக 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று மாலை பதவிப்பிரமாணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tamil News

Leave a Reply