ஆப்கானிஸ்தான்: காந்தஹாரில் விமான நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல்- விமான சேவைகள் இரத்து

213 Views

3845973 ஆப்கானிஸ்தான்: காந்தஹாரில் விமான நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல்- விமான சேவைகள் இரத்து

ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான காந்தஹாரில் உள்ள விமான நிலையத்தை, குறைந்தபட்சம் மூன்று ஏவுகணைகள் தாக்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அனைத்து விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டு இருப்பதாக அவ்விமான நிலைய முதன்மை அதிகாரி மசூத் பஸ்தூன் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் ஹெராத், லஷ்கர் கா, காந்தஹார் போன்ற முக்கிய நகரங்களை  தலிபான்கள் சூழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனவே ஆப்கன் அரசு படைக்கும் தலிபான்களுக்கும் மத்தியிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply