வவுனியா பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

167 Views

IMG 20210716 WA0004 வவுனியா பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

வவுனியா பல்கலைக்கழகம் இன்றிலிருந்து தனியான பல்கலைக்கழகமாக தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றது.

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா பல்கலைக்கழகமாக கடந்த மாதம் தரமுயர்த்தப் பட்டிருந்தது. அதன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் அனைத்தும் இன்று முதல் ஆரம்பிக்கின்றது.

அந்த வகையில் இலங்கையின் 17 ஆவது அரச பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப் பட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு வட மாகாண இணைந்த பல்கலைக்கழக கல்லூரியாக உருவாக்கப்பட்டு 1997ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகமாக தரமுயர்த்தப் பட்டது.  தற்போது குறித்த வளாகம் ஒரு தனியான பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப் பட்டுள்ளது.

வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக கலாநிதி த.மங்களேஸ்வரன் நியமிக்கப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply