ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் நினைவு நாள் இன்று 

258 Views

image0 ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் நினைவு நாள் இன்று 

யாழ்.பல்கலைக்கழக ஊடக மாணவனும், ஊடகவியலாளருமான சகாதேவன் நிலக்சனின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்றது. 

சகாதேவன் நிலக்சனின் கடந்த 2007 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி இலங்கை இராணுவ புலனாய்வாளர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

2007 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி அதிகாலை வேளை ஆடியபாதம் வீதி கொக்குவில் பகுதியில் உள்ள அவருடைய வீடு இராணுவ புலனாய்வாளர்களால்   முற்றுகையிடப்பட்டது.

அதே நேரம் வீட்டில் இருந்த சகாதேவன் நிலக்சனை விசாரிக்க வேண்டும் என்று கூறி  வீட்டு வாசலில் வைத்து விசாரித்துள்ளனர். இதன் போது சகாதேவன் நிலக்சனின் தாய் தந்தையர்கள் முன்னிலையில் திடீரென சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply