இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலத்தை பாதுகாக்க தொழிற்சங்கங்கள் போராட்டத்தை ஆரம்பிக்கும் என அகில இலங்கை பொது துறைமுக ஊழியர் சங்கத்தின் பிரதம செயலாளரான நிரோஷன் கோரகனகே தெரிவித்துள்ளார்.
துறைமுக அதிகாரசபையின் பல சேவைகளை தனியார் மயமாக்க மற்றும் தொடர்புடைய நிலத்தை விற்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதற்கான உடன்படிக்கைகளை கைச்சாத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், எனினும் தொழிற்சங்கங்கள் அதை அனுமதிக்காது. எரிசக்தி அமைச்சரை இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தினார்,
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தொழிற்சங்கங்கள் நிலத்தை விற்கவோ அல்லது சேவைகளை சீன நிறுவனத்திடம் ஒப்படைக்கவோ அனுமதிக்காது. அனைத்து துறைமுக ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். அனைத்து நிலுவைத் தொகையையும் தீர்க்க வேண்டும்” என்றார்.