இலங்கையில் கடத்தல்கள் தொடர்கின்றன- பாராளுமன்றத்தில் சுமந்திரன் குற்றச்சாட்டு

21 60d2f6600f5b9 இலங்கையில் கடத்தல்கள் தொடர்கின்றன- பாராளுமன்றத்தில் சுமந்திரன் குற்றச்சாட்டு

சிவில் உடையில் பொது மக்கள் காவல் துறையினரால் பட்டப்பகலில் கடத்தப் படுகின்றனர் என  பாராளுமன்றத்தில்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், “இவ்வாறான கைதுகள் இலங்கையில் சட்டமொழுங்கின்மை முற்றாக செயல் இழந்துள்ளதை காண்பிக்கின்றன. சந்தேக நபர்களை கைது செய்வதற்கு ஏன்  காவல் துறையினர் வெள்ளை வானில் வருகின்றனர்.  சிவில் உடையில் சென்று கைது செய்வது பிழையான முன்னுதாரணம். நாளை குற்றவாளிகளும் அதனை செய்யலாம்” என சுட்டிக் காட்டினார்.

மேலும் “ஏன் அவர்கள் சிவில் உடையில் வருகின்றனர், ஏன் அவர்கள் வெள்ளை வானில் வருகின்றனர், நீங்கள் வெள்ளை வான் கலாச்சாரத்தை நாட்டிற்கு நினைவு படுத்துவதற்கு முயற்சிக்கின்றது, நாங்கள் முன்னர் செய்தோம் அதனை மீண்டும் கொண்டு வந்திருக்கின்றோம் என நாட்டிற்கு தெரிவிக்க முயல்கின்றீர்கள், நீங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த முயல்கின்றீர்கள் அதற்காகவே நீங்கள் இதனை செய்கின்றீர்கள்” என சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

ilakku-weekly-epaper-140-july-25-2021