கிழக்குப் பல்கலையின் நிர்வாகத் தொகுதி முற்றாக முடக்கம்

slide1 கிழக்குப் பல்கலையின் நிர்வாகத் தொகுதி முற்றாக முடக்கம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பல உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பலருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப் படுத்தப்பட்டதை அடுத்து, பல்கலைக் கழகத்தின் நிர்வாகக் கட்டடத் தொகுதி முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

நிர்வாகக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அலுவலகங்களில் பணியாற்றும் பல பணியாளர்களுக்கு கடந்த வாரமும், இந்த வாரத்தின் ஆரம்பத்திலும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்ததை அடுத்து அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் பல்கலைக் கழகத்தைச் சேரந்த பீடாதிபதிகள் உட்பட சுமார் 60 க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ilakku-weekly-epaper-140-july-25-2021