இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

618 Views

1628264453 COVID deaths Sri Lanka L இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

இலங்கையில் நேற்று (05) வியாழக்கிழமை 98 கோவிட் மரணங்கள் பதிவாகி உள்ளதாக இன்றைய தினம் அறிக்கை யிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் இதுவரையில் பதிவாகியுள்ள கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,919 ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரம்  இது வரையில்  கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 323,339 ஆக அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply