கிழக்கில் ‘டெல்டா’ பேராபத்து; 48மணிநேரத்தில் 974 தொற்றுகள்! 16 பேர் பலி

DeltaVariant கிழக்கில் 'டெல்டா' பேராபத்து; 48மணிநேரத்தில் 974 தொற்றுகள்! 16 பேர் பலிகிழக்கு மாகாணத்தில் வழமைக்கு மாறாக கடந்த 48 மணி நேரத்தில் 974 தொற்றுகளும் 16 மரணங்களும் ஏற்பட்டுள்ளன. டெல்டாவின் பிரசன்னமும் நிகழ்ந்துள்ளது. இது கிழக்கில் மற்றுமொரு பேராபத்து நெருங்குவதை கட்டியம் கூறி நிற்கிறது என்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் 507கோவிட் தொற்றுகளும் 09மரணங்களும் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினம் 467கோவிட் தொற்றுகளும் 07மரணங்களும் ஏற்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 230தொற்றுக்களும், 2மரணங்களும் சம்பவித்துள்ளன.

அம்பாறை பிரிவில் 127தொற்றுக்களும் 1மரணமும், கல்முனை சுகாதாரப் பிராந்தியத்தில் 81தொற்றுக்களும் 6மரணங்களும், திருகோணமலை மாவட்டத்தில் 70தொற்றுக்களும், ஏற்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக தொற்றாளர்களாக 247 நபர்களும், கல்முனையில் அம்பாறையில் 81, கல்முனையில் 72 ,திருகோண மலையில் 67 எனவும் புதிய தொற்றாளர்கள் இனங்காணப் பட்டுள்ளார்கள்.

கடந்தசில நாட்களாக நாட்டின் ஏனைய மாகாணங்களில் சடுதியாக ஏற்பட்டுள்ள சடுதியான நோயாளர் மற்றும் மரணங்களின் அதிகரிப்பு கிழக்கு மாகாணத்திலும் ஏற்பட்டு வருவதைக் காணக் கூடியதாயுள்ளது.

கடந்த வாரங்களில் கிழக்கில் 200-250நோயாளர்களும் 2-3 மரணங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால் தற்போது அத்தொகை மும்மடங்காக மாறி வருகிறது. இது கிழக்கு மாகாணத்திற்கு அபாய அறிவிப்பாக கருத முடியும்.

397பேர் மரணம்!
கிழக்கில் இதுவரை 397கோவிட்  மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
மட்டக்களப்பு 02 கல்முனை 04 அம்பாறை 01 என ஏழு மரணங்களும் பதிவாகியுள்ளது.
மொத்தமாக மூன்றாம் அலையின் பின் 18231 கோவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளார்கள். 370 மரணங்களும் மொத்தமாக 397கோவிட் மரணங்கள் ஏற்பட்டுள்ளது.
திருகோணமலையில் அதிக 151 மரணங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 119பேரும், கல்முனையில் 86, அம்பாறையில் 41 எனவும் மரணங்கள் சம்பவித்துள்ளன.

இதனை கருத்திற் கொண்டு, மக்கள் அவதானத்துடன் சுகாதார வழி முறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கவும், சமூக இடைவெளிகளை பேணுதல் ,முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சவர்க்காரம் இட்டு கழுவுதல் போன்ற விடயங்களை அரசின் கட்டுப்பாடுகளுக்கு அமைய நடந்து கொள்ள வேண்டும்.

தடுப்பூசியைப் பெற்று விட்டோம் என்ற நினைப்பில், சுகாதார நடைமுறைகளில் ஒருவித தளர்வை கடைப் பிடிப்பதாகவே பார்க்கிறோம். எனவே தயவுசெய்து அனைவரும் தொடர்ச்சியாக சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

ilakku-weekly-epaper-140-july-25-2021