முன்னாள் அரசியல் கைதி ஒருவரை பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு வருமாறு அழைப்பு

213 Views

வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு  வருமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினரால் (ரி.ஐ.டி)  அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

IMG 9442 முன்னாள் அரசியல் கைதி ஒருவரை பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு வருமாறு அழைப்பு

வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் ஆனந்தவர்மன் என்பவரையே எதிர்வரும் 10 ஆம் திகதி வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணை மற்றும் தடுப்பு பிரிவுக்கு சமுகமளிக்குமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

IMG 9441 முன்னாள் அரசியல் கைதி ஒருவரை பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு வருமாறு அழைப்பு

அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, “பயங்கரவாத விசாரணை மற்றும் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக, விசாரணையை மேற்கொள்வதற்கு 2021 ஆம் ஆண்டு 8 ஆம் மாதம் 10 ஆம் திகதி காலை 10 மணிக்கு பயங்கரவாத விசாரணை மற்றும் தடுப்பு பிரிவு வவுனியா கிளைக்கு சமுகமளிக்குமாறு அழைக்கின்றோம்” என தெரிவிக்கப் பட்டுள்ளது.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply