7 பேர் விடுதலையில் அம்மாவின் அரசு உறுதியாக உள்ளது- துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கருத்து

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது என தமிழகத்தின் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநரே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதுதொடர்பாக தமிழக அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்கவில்லை. தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு, வரும் செவ்வாய்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் ஏழு பேர் விடுதலை குறித்து ஆவணங்களை ஆய்வு செய்த ஆளுநர், இந்த விவகாரத்தில் முடிவெடுக்க குடியரசு தலைவருக்கே அதிகாரம் உள்ளது  என்று தெரிவித்துள்ளார்.

WhatsApp Image 2021 02 06 at 12.31.44 PM 7 பேர் விடுதலையில் அம்மாவின் அரசு உறுதியாக உள்ளது- துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கருத்து

இந்தநிலையில்,  “பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து சட்டப்பூர்வ ஆலோசனை மேற்கொண்டு உரிய தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். 7 பேர் விடுதலையில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது” என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,எழுவர் விடுதலை விவகாரத்தில், இரண்டாவது முறையாக அமைச்சரவை தீர்மானித்து அனுப்பினால் ஆளுநர் வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டே தீரவேண்டும் என திராவிடர் கழகத் தலைவர்  கீ.வீரமணி தெரிவித்துள்ளார்.