சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் மருத்துவமனையில் அனுமதி

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் இதனை உறுதிப்படுத்தினார்.

சுகயீனம் காரணமாக நேற்று (15) பிற்பகல் அவர் சிறைச்சாலை மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், அவர் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.