ஐ.நா அமைதிப்படையில் இருந்து இலங்கை இராணுவத்தை நீக்க வேண்டும்- யஸ்மின் சூக்கா

ஐ.நா அமைதிப்படையில் இருந்து இலங்கை இராணுவத்தை நீக்க வேண்டும் என யஸ்மின்சூக்கா (Yasmin Sooka) வலியுறுத்தியுள்ளார்.

மனித உரிமை ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையின் படி இலங்கைப் படையினரை அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஐ.நா இடைநிறுத்த வேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைப் படையினரை அமைதிப் பணிகளில் ஈடுபடுவதற்கு முன்னர் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டிய சட்டரீதியான கடமை ஐநா அமைதிப்பணிகளுக்கான திணைக்களத்திற்குள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

போர்க் குற்றங்களில் ஈடுபட்ட சிறீலங்கா அரச அதிகாரிகள் மற்றும் படை அதிகாரிகளின் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை முடக்குதல் மற்றும் அவர்கள் மீதான பயணத்தடைகளை கொண்டுவருதல் போன்ற விடயங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்பட்டவுள்ள அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.