சீனாவின் ஜெங்ஜோநகரில் கொட்டி தீர்த்த மழையில் 33 பேர் உயிரிழப்பு

95 Views

119527894 gettyimages 1234086975 1 சீனாவின் ஜெங்ஜோநகரில் கொட்டி தீர்த்த மழையில் 33 பேர் உயிரிழப்பு

சீனாவின் க்ஹெனான் மாகாணத்தின் ஜெங்ஜோ நகரில் மூன்று வருடங்களில் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாளில் கொட்டி தீர்த்ததில் இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ வீய்போ சமூக ஊடகத்தின் மூலம் மக்கள் இணைந்துள்ளனர்.

இதில் ஹெனான், ’ஸ்டே ஸ்ட்ராங் ஹெனான’ போன்ற ஹாஷ்டாகுகளுடன் உதவி தேவைப் படும் நபர்களை மீட்புக் குழுவினருடன் இணைத்து வருகின்றனர்.

பல வீய்போ சமூக வலைதளத்தில் தாங்கள் பாதிக்கப்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

பலர் உதவி கோருபவர்களின் பதிவை மீட்புக் குழுவினருக்கு ஃபார்வேட் செய்து வருகின்றனர்.

இந்த ஆபத்தான சூழலில் மனநலம் உறுதியோடு இருக்க அறிவுரைகளையும் சமூக வலைதளத்தில் பலர் வழங்கி வருகின்றனர்.

 இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Leave a Reply