இந்தியா: திரிபுரா மாநிலத்தில் 10 குழந்தைகள் உள்பட 24 ரோஹிங்கியா அகதிகள் கைது

ரோஹிங்கியா அகதிகள் கைது

24 ரோஹிங்கியா அகதிகள் கைது

இந்தியா: ஜம்முவிலிருந்து தொடருந்து மூலம் கொல்கத்தா, கவுகாத்தி வழியாக திரிபுராவுக்கு சென்ற 10 குழந்தைகள் உள்பட 24 ரோஹிங்கியா அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக திரிபுரா காவல்துறை தெரிவித்துள்ளது.

இரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, திரிபுராவின் Kumarghat பகுதியிலிருந்து Kailashahar பகுதிக்கு சென்ற மூன்று வாகனங்களை எல்லைப் பாதுகாப்பு படை இடைமறித்து அகதிகளை கைது செய்ததாகக் கூறப்படுகிறது.

Explainer: Rohingya refugees face crowded camps, dangerous sea journeys and  COVID-19 - Amnesty International

இந்த அகதிகள் Kailashahar உள்ள சர்வதேச எல்லை வழியாக வங்கதேசத்துக்கு செல்ல திட்டமிட்டிருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. விசாரணையின் போது அகதிகள் சிலர் ஐ.நா. வழங்கியுள்ள அகதிகள் அடையாள அட்டைகளை காட்டியதாக சொல்லப்படும் நிலையில் விசாரணைக்கு பிறகு அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

Tamil News