எரிபொருளுக்கு ரூபிள் மூலம் தான் பணம் செலுத்த வேண்டும் – ரஷ்யா

ரூபிள் மூலம் தான் பணம் செலுத்த வேண்டும்

உக்ரைன் மீதான படை நடவடிக்கையை காரணம் காட்டி ரஷ்யா மீது அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் விதித்த பொருளாதார தடைகளுக்கு பதிலடியாக தனது நட்பு நாடுகளின் பட்டியலில் இல்லாத நாடுகள் தன்னிடமிருந்து கொள்வனவு செய்யும் எரிபொருளுக்கான பணத்தை ரஷ்ய பணமான ரூபிள் மூலம் தான் பணம் செலுத்த வேண்டும் என கடந்த புதன்கிழமை (23) ரஸ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் விளமிடீர் பூட்டினின் இந்த அறிவித்தலை தொடர்ந்து பொருளாதார தடையினால் வீழ்ச்சி கண்ட ரூபிள் நாணயம் அமெரிக்க டொலருக்கு எதிராக அதிகப்படியான உயர்வை கண்டிருந்தது.

ரஷ்யாவின் இந்த அறிவிப்பினால் ரஸ்யாவிடம் இருந்து எரிபொருளை பெறும் ஐரோப்பிய நாடுகள் கடுமையான நெருக்கடிக்குள் சிக்கியுள்ளன. உடன்பாட்டில் அவ்வாறு எழுதப்படவில்லை என இத்தாலியும், ஜேர்மனியும் தெரிவித்துள்ளன.

எவ்வாறு இந்த கொடுப்பனவை மேற்கொள்வது என தமக்கு விளங்கவில்லை என யப்பான் தெரிவித்துள்ளது. இதனிடையே, ரூபிளில் பணம் செலுத்த தனக்கு விருப்பமில்லை என பல்கேரியா தெரிவித்துள்ளபோதும் அதனை ஏற்க ரஷ்யா மறுத்துள்ளது.

ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து 40 விகிதமான எரிபொருளை இறக்குமதி செய்வது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tamil News