கடுமையான நிபந்தனைகளுடன் நிதியை வழங்கிய இந்தியா

198 Views

நிபந்தனைகளுடன் நிதியை வழங்கிய இந்தியா

நிபந்தனைகளுடன் நிதியை வழங்கிய இந்தியா

இலங்கையின் தற்போதைய நிதி நெருக்கடியைத் தணிப்பதற்கு பணம் வழங்குவதை தாமதப்படுத்தி வந்த இந்தியா, தற்போது பல அனுகூலங்களை பெற்றுக் கொண்டு ஒரு பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

இலங்கையில் தனது திட்டங்களை நிறைவேற்றுவதில் தொடர் தோல்விகளையே இந்தியா சந்தித்து வந்திருந்தது. கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்தித் திட்டத்தில் இருந்தும் இலங்கை அரசு இந்தியாவை வெளியேற்றியிருந்தது.

ஆனால் தற்போது திருமலை எண்ணைக்குதங்கள், சம்பூர் சூரிய சக்தித் திட்டம், மன்னார் காற்றாலை மின்உற்பத்தித் திட்டம் போன்றவற்றை இந்தியா தன்னகப்படுத்திய பின்னரே இலங்கைக்கான கடனை வழங்கியுள்ளது.

இந்தியாவின் எரிசக்தி மற்றும் எரிவாயுத் துறை அமைச்சர் சிறீ ஹர்தீப் பூரியே இலங்கையின் எரிசக்தி அமைச்சராக தொழிற்படுவதாகவும், இலங்கையின் எரிபொருள் துறையை முற்றாக இந்தியா கைப்பற்றியுள்ளதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

1987 ஆம் ஆண்டு யாழப்பாணத்தில் விடுதலைப்புலிகளுடன் இந்தியா மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் ஹர்தீப் சிங் பூரி பங்குபற்றியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply