உக்ரைன் போரினால் ஒன்றுசேரும் அரபுலகம்

153 Views

ஒன்றுசேரும் அரபுலகம்

ஒன்றுசேரும் அரபுலகம்

நீண்டகால பகையாளிகளான அரபு நாடுகளை உக்ரைனில் ரஸ்யாவுக்கும் மேற்குலகத்திற்கும் ஏற்பட்ட பனிப்போர் ஒருங்கிணைத்துள்ளது.

2015 ஆம் ஆண்டு சிரியாவுக்குள் ரஸ்யா தனது படைகளை அனுப்பியபோது சிரிய அரசை காப்பாற்றுவது மட்டுமல்லாது அரபு நாடுகளிடம் மீண்டும் ஒரு ஒருங்கிணைவை கொண்டு வருவதும் ரஸ்யாவின் நீண்டகால திட்டமாக இருந்தது.

அதற்காக பல ஆண்டுகள் முயற்சிகளை மேற்கொண்டதன் பலனாக சிரிய அதிபர் பசார் அல் அசாத் கடந்த வாரம் ஐக்கிய அரபு எமிரேற் இற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு சிரியாவில் தனது அலுவலகத்தை திறந்த எமிரேற் கடந்த ஆண்டு தனது வெளிவிவகார அமைச்சரையும் அங்கு அனுப்பியிருந்தது. அரபு நாடுகளின் கூட்டமைப்புக்குள் சிரியாவை கொண்டுவருவதில் எமிரேற் மேற்கொண்ட முனைப்பு என்பது ரஸ்யாவுக்கும் அபுதாபிக்கும் இடையிலான நெருக்கத்தை காண்பிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply