நியூசிலாந்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர் மட்டு- காத்தான்குடியைச் சேர்ந்தவர் என அடையாளம்

140 Views

நியூசிலாந்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர்

நியூசிலாந்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர்: நியூசிலாந்தில் மக்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில்  காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம் காணப் பட்டுள்ளார்.

நியூசிலாந்தில்  Auckland நகரிலுள்ள விற்பனை நிலையமொன்றில் ஆறு பேரைக் கத்தியால் குத்திக் காயப்படுத்திய  இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் அந்நாட்டுக் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இது குறித்து கருத்து தெரிவித்த நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern, இதை செய்தவர் ISIS அமைப்பால் ஈர்க்கப்பட்ட ஒருவர் என்றும், நடந்தது ஒரு தீவிரவாத செயல் எனவும்  கூறியிருந்தார்.

Auckland நகரின் தென்மேற்கு புறநகர்ப் பகுதியான New Lynn என்ற இடத்தில் உள்ள Countdown  என்ற விற்பனை நிலையமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் வட்டாரத்தினை சேர்ந்த  முகமட் சம்சுதீன் ஆதில் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் எட்டு வயதிலேயே கொழும்பு சென்று,கொழும்பு இந்துக் கல்லூரியில் கல்வி கற்றுள்ளதாகவும் பின்னர் 2011ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி  காவல்துறையினர் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply