காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன? பதிலுக்காக பலர் காத்திருக்கின்றனர் என்கிறார் அமெரிக்கத் தூதர்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்னகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன: “இலங்கையில் பலரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்கள் விடயத்தில் உண்மையான பதிலைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்.”

இவ்வாறு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான சர்வதேச தினத்தையொட்டி அவர் நேற்று வெளியிட்டுள்ள ருவிட்டர் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்குவது பாதிக்கப்பட்டவர்களை மாத்திரம் அன்றி அவர்களது குடும்பத்தையும் மற்றும் சமூகத்தையும் பாதிப்படையச் செய்கின்றது என்றும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

ilakku-Weekly-Epaper-145-August-22-2021