இணையவழி விளையாட்டுக்கள் – ஒரு மணிநேரமே அனுமதி

351 Views

இணையவளி விளையாட்டுக்கள்: இணையவழி ஊடாக சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுக்களுக்கு ஒரு மணிநேரமே அனுமதி வழங்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, தலிபான்கள், ஆப்கானிஸ்தான்: எதிர்காலம் இவர்களுக்கு எப்படி அமையப்போகிறது? – மொழியாக்கம்: ஜெயந்திரன்

18 வயதுக்கு கீழ்பட்டோர் விளையாடும் இந்த விளையாட்டுக்களுக்கு வெள்ளிக்கிழமை, வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ஒரு மணிநேரமே அனுமதி வழங்கப்படும் என சீனாவின் காணொளி விளையாட்டுக்கள் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இரவு 8 மணி முதல் 9 மணிவரையிலுமே அதற்கான அனுமதிகள் வழங்கப்படும். இணையத்தள விளையாட்டுக்கள் என்பது ஒரு போதைப் பொருளை போன்றது என கடந்த மாதம் சீனாவின் நாளேடுகள் விபரித்திருந்தன.

புதிய விதிகளின் மூலம் இளைய சமுதாயத்தில் கல்வி அறிவை விருத்தி செய்து அவர்களை ஒரு நல்வழிப்படுத்த முடியும் என சீனா அரசு நம்புகின்றது.

ilakku-Weekly-Epaper-145-August-22-2021

Leave a Reply