தைவானுடன் ஒன்றிணைய விரும்புகிறோம்-சீன அதிபர்

தைவானுடன் ஒன்றிணைய விரும்புகிறோம்


அமைதியான முறையில் தைவானுடன் ஒன்றிணைய விரும்புகிறோம் என சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டுப் போருக்கு பிறகு  தைவான் உருவானது. என்றாலும் தைவான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அரசு கூறி வருகிறது.

தேவைப்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் சில மாதங்களுக்கு கூறி இருந்தது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது தைவான்.

இந்நிலையில், சீன கிரேட் ஹால்லில் நடந்த நிகழ்வு ஒன்றில் சீன அதிபர் ஜி ஜின்பிங்  உரையாற்றும் போது,

சீனா அமைதியான முறையில் தைவானுடன் ஒன்றிணைய விரும்புகிறது. தைவான் சுதந்திர பிரிவினைவாதம் தாய்நாட்டுடன் மீண்டும் ஒன்றிணைப்பதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது.  சீனா தனது இறையாண்மையையும் ஒற்றுமையையும் பாதுகாக்கும். தாய்நாட்டை முழுமையாக ஒன்றிணைக்கும் வரலாற்று பணி நிறைவேற்றப்பட வேண்டும், நிச்சயமாக நிறைவேற்றப்படும். “ என்று தெரிவித்தார்.

ilakku-weekly-epaper-150-october-03-2021