படகில் தப்பிய இலங்கை அகதிகள்? – அகதிகள் முகாம்களில் காவல்துறையினர் ஆய்வு

அகதிகள் முகாம்களில் காவல்துறையினர் ஆய்வு


தமிழக அகதிகள் முகாமில் இருந்து 64 இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக தப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை நாட்டில் இருந்து வரக்கூடிய அகதிகளுக்காக தமிழகத்தில் 109 அகதிகள் முகாம்கள் உள்ளன. தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் உள்ள  109 முகாம்களில் 65 ஆயிரம் அகதிகள் தங்கியுள்ளனர். 

இந்நிலையில், இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்களில் இருந்து 64 போ் படகு மூலமாக, தென்னாப்பிரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்று மாலத்தீவு அருகே சா்வதேச  காவல்துறையினரிடம்  சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து தமிழ்நாட்டிலுள்ள அகதிகள் முகாம்களில் காவல்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும் தமிழக கியூ பிரிவு  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம்களில் வசிக்கும் 64 போ் கடந்த செப்டம்பா் முதல் வாரத்தில் கேரளத்தில் ரூ.45 இலட்சம் மதிப்பில் இந்தியப் பதிவு பெற்ற படகை விலைக்கு வாங்கி இலங்கைத் தமிழா் 20 பேரை ஏற்றிக் கொண்டு கனடாவில் தஞ்சம் புகத் திட்டமிட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மாலைத்தீவு மற்றும் மொரீஷியஸ் நாடுகளுக்கு இடையிலான கடற்பரப்பில் இவா்கள் சென்ற படகு மோசமான வானிலை காரணமாக, சா்வதேச காவல்துறையினரிடம் சிக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள முகாம்களில் இருந்து 64 அகதிகள் சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு தப்ப முயன்றாக வந்த தகவலையடுத்து க்யூ பிரிவு காவல்துறையினர் தென் மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் கடந்த 3 நாள்களுக்கும் மேலாக தீவிர சோதனை நடத்தி உள்ளனா்.

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் விஐயம் குறித்து பேராசிரியர் கணேசலிங்கம் செவ்வி | ILC | இலக்கு

ilakku-weekly-epaper-150-october-03-2021

Leave a Reply