“நாமே நமக்கான புதைகுழிகளை தோண்டிக் கொண்டிருக்கின்றோம்” ஐ.நா பொதுச்செயலர் எச்சரிக்கை

370 Views

நாமே நமக்கான புதைகுழிகளை தோண்டிக் கொண்டிருக்கின்றோம்

காலநிலை மாற்றத்திற்கு எதிராக துரிதமாக செயற்படாமை மூலம் நாமே நமக்கான புதைகுழிகளை தோண்டிக் கொண்டிருக்கின்றோம் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டேரஸ் (António Guterres)  எச்சரித்துள்ளார்.

உலக வெப்பமாதலை தடுக்கும் அல்லது குறைக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கருப்பொருளில் இந்த மாநாடு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,நேற்றுமுன்தினம் ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் ஆரம்பமான, COP26 எனப்படும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்கான 26 ஆவது மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு எச்சரிக்கை செய்துள்ளார்.

சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள நிலையில், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள், தாம் மேற்கொள்ளும் “அழிவுகளுக்கு எதிரான நடவடிக்கை”களுக்காக அபிவிருத்தி அடைந்த நாடுகள் உறுதியளித்த உதவித் தொகையை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டன.

அத்தோடு சிறிய தீவு நாடுகள் “திகிலூட்டும்” தாக்கங்களை எதிர்கொள்வதாக அச்சம் வெளியிட்டுள்ளன.

Leave a Reply