மட்டக்களப்பு: விவசாய அமைச்சரின் கருத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

அமைச்சரின் கருத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

தூக்குத்தண்டனை கைதிகளுக்கு தங்களது இறுதி விருப்பத்தினை கேட்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்ற போதிலும், விவசாயிகளுக்கு அந்த சந்தர்ப்பத்தினை ஜனாதிபதி வழங்காதது கவலைக்குரியது என விவசாயிகள் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட விவசாய அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே, வடக்கு கிழக்கில் உள்ள விவசாயிகள் தனக்கு எதிராக எந்தவொரு ஆர்ப்பாட்டத்திலோ போராட்டங்களிலோ கலந்துகொள்ளவில்லையென்று என்று தெரிவித்திருந்தார்.

விவசாய அமைச்சரின் கருத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டனர்.  வவுணதீவு உழவர் சிலைக்கு முன்பாக விவசாய அமைப்புக்களை சேர்த்த விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது விவசாயிகள் அமைச்சருக்கு எதிராகவும், உரம் வேண்டியும் கோசங்களை எழுப்பியதுடன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் அண்மையில் விவசாயிகள் தொடர்பில் தெரிவித்த கருத்திற்கும் இதன்போது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

கடந்த காலங்களில் மண் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தற்போது உரத்தினை வைத்தும் கடத்தல் செய்ய நினைப்பதனால் விவசாயிகளே பாதிப்புக்குள்ளாகுவதாகவும் தெரிவித்துள்ளனர். அதேவேளை தமது உரப்பிரச்சனைக்கு மிக விரைவில் தீர்வினை வழங்காவிடின் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்று திரண்டு மிக விரைவில் விவசாய அமைச்சருக்கு எதிராக மட்டக்களப்பில் பாரிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும்  தெரிவித்துள்ளனர்.

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad மட்டக்களப்பு: விவசாய அமைச்சரின் கருத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம்