சுவிசில் இந்த வார இறுதியில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை

80 Views

WhatsApp Image 2021 07 22 at 11.21.12 AM சுவிசில் இந்த வார இறுதியில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை

அண்மையில் ஐரோப்பாவில் பெய்த கன மழையால் பல நாடுகளில் பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த பாதிப்புக்களில் சிக்கி 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

இதனையடுத்து கடந்த சில நாட்களாக காலநிலை மாறி வெப்ப நிலை தொடர்கின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை  சீரான நிலைக்கு திரும்பி வருகின்ற போதும்,   இந்த வெப்பமான காலநிலை நீடிக்காதெனவும் இந்த வார இறுதியில் கடுமையான மழை பெய்யுமெனவும் சுவிஸ் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

WhatsApp Image 2021 07 22 at 11.20.59 AM சுவிசில் இந்த வார இறுதியில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை

ஏரிகள் மற்றும் ஆறுகளில் நீர் நிரம்பி வழியுமெனவும் காலநிலை சீர்கேட்டால் நீர் குளிராகவுள்ளதால் நீர்நிலைகளுக்கு மக்களை செல்ல வேண்டாமெனவும் சுவிஸ் வானிலை ஆய்வாளர் கிளவுஸ் மார்க்குவாட் தெரிவித்துள்ளார். குறிப்பாக நீர் குளிராகவுள்ளதால்   நீராடும் போதோ, அல்லது நீந்தும் போதோ இதயம் பாதிப்படையலாம் எனவும் அவர்  எச்சரித்துள்ளார்.

WhatsApp Image 2021 07 22 at 11.21.09 AM சுவிசில் இந்த வார இறுதியில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை

மேலும் வார இறுதியிலிருந்து குறைந்தது பத்து நாட்களுக்கு மழை வீழ்ச்சி கூடுதலாக இருக்கலாம் எனவும். குறுகிய நேரத்துக்குள் 20-100 மில்லி லீட்டர் மழை வீழ்ச்சி இருக்கும் என்பதாலும் ஏற்கனவே மழை கடுமையாக இருந்தமையால் மண் ஈரலிப்பாக உள்ளதனால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் எச்சரிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Leave a Reply