‘திலீபன் அழைப்பது சாவையா’ என்ற பாடலை பாடிய குரல் ஓய்ந்தது

386 Views

திலீபன் அழைப்பது சாவையா

திலீபன் அழைப்பது சாவையா, இந்த சின்ன வயதில் இது தேவையா?’ என்ற பாடலை பாடியிருந்த பெண் கவிஞரும் பாடகியுமாகியன திருமதி மரியதாஸ் மேரி நாயகி (நவாலியூர் நாயகி) அவர்கள் கடந்த 26.10.21 அன்று காலமாகியுள்ளார்.

கடந்த காலங்களில் தமிழ் இனத்திற்காக போராடியவர்களுடன் இணைந்த கலைஞர்கள் இன்றும் தாயகத்திலும் புலம்பெயர் நாட்டிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

சிலர் திரைமறைவில் வாழ்ந்து கொண்டுவந்தாலும் தங்கள் கலை உணர்வுகளை வெளிப்படுத்தும் சந்தர்பங்கள் கிடைத்தவர்கள் வெளிப்படுத்தி வருகின்றார்கள். இவ்வாறானவர்களில் ஒரு பாடகிதான் மேரிநாயகி. யாழ்ப்பாணம் நவாலியூரினை சேர்ந்த இவர், தமிழர்களின் உரிமைக்காக போராடிய காலகட்டத்தில் குறிப்பாக 80 காலப்பகுதிகளில் பல எழுச்சி பாடல்களைப் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,பாடகி மேரிநாயகி அவர்களுக்கு  இலக்கு ஊடகம் தனது புகழ் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

  ilakku Weekly Epaper 153 october 24 2021 Ad 'திலீபன் அழைப்பது சாவையா' என்ற பாடலை பாடிய குரல் ஓய்ந்தது

Leave a Reply