பிரிட்டனின் வெளியுறவு செயலாளர், இலங்கையின் மனித உரிமைகள் குறித்து குறிப்பிடாதது அசாதாரணமானது-   கெரெத் தோமஸ்

148 Views

பிரிட்டனின் வெளியுறவு செயலாளர்

பிரிட்டனின் வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரூஸ், இலங்கையின் வெளியுறவு அமைச்சரிடம் மனித உரிமைகள் குறித்து கலந்துரையாடாதது அசாதாரணமானது என்று பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் கெரெத் தோமஸ் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பிரிட்டனின் வெளியுறவு வெயலாளர் லிஸ் ட்ரூஸ் நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

குறித்த சந்திப்பு தொடர்பாக லிஸ் ட்ரூஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “மனித உரிமைகள், போர்க்குற்றங்கள் மற்றும் தண்டனையின்மைக் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவது” பற்றி கலந்துரையாடப்பட்டவை குறித்து குறிப்பிடப்படவில்லை என்று பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் கெரெத் தோமஸ் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இலங்கையுடன் வலுவான தொடர்புடைய பிரிட்டன் வாழ் மக்கள் வெளியுறவு செயலாளரிடம் இருந்து இதனைவிட சிறந்ததை எதிர்பார்ப்பதாக   கெரெத் சுட்டிக்காட்டியுள்ளார்.

  ilakku Weekly Epaper 153 october 24 2021 Ad பிரிட்டனின் வெளியுறவு செயலாளர், இலங்கையின் மனித உரிமைகள் குறித்து குறிப்பிடாதது அசாதாரணமானது-   கெரெத் தோமஸ்

Leave a Reply