இரும்பு, அலுமினியத்துக்கு 25% இறக்குமதி வரி: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

இறக்குமதியாகும் இரும்பு, அலுமினியத்துக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபரான நாள் முதலே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதுவும் குறிப்பாக வரி விதிப்புகள் மூலம் அவர் புதிய வர்த்தகப் போரை உலக நாடுகள் மீது கட்டவிழ்த்துள்ளார் என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மேலும், ட்ரம்ப்பின் வரி விதிப்பு தொடர்பான அறிவிப்புகளின் எதிரொலியாக உலக நாடுகளின் நாணயங்கள் பல மதிப்பு குறைவது, தங்கம் விலை உயர்வவது போன்ற பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,இரும்பு, அலுமினியம் பொருட்கள் மீதான இறக்குமதி வரி விதிப்பு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ளார். இரும்பு, அலுமினிய இறக்குமதிக்கு தலா 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படக் கூடும் என்று ட்ரம்ப் ஓர் எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.