சர்வதேச நாணய நிதியத்தின் வளங்களை பயன்படுத்துங்கள் – இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல் 

138 Views

இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்: இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள சர்வதேச நாணய நிதியத்தை கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்திடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

உறுதியான பொருளாதார அடித்தளத்தை உருவாக்கும் மாற்றங்களில் அரசாங்கம் ஈடுபட வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் dailymirror செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய செவ்வியில் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா, தலிபான்கள், ஆப்கானிஸ்தான்: எதிர்காலம் இவர்களுக்கு எப்படி அமையப்போகிறது? – மொழியாக்கம்: ஜெயந்திரன்

இதேவேளை அண்மையில் நிதியமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பில் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் ஆபத்து தொடர்பாகவும் விவாதித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இலங்கையின் பொருளாதாரம் பற்றிய கவலை தொடர்பாகவும் குறிப்பாக நாட்டின் பொருளாதாரம் தற்போது சிறந்த ஆரோக்கிய நிலையில் இல்லை என்பதை சுட்டிக்காட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய வளங்களைப் பயன்படுத்துவதே இதற்கான தீர்வு என தாம் நம்புவதாகவும் அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

ilakku-Weekly-Epaper-145-August-22-2021

Leave a Reply