அணு உலையை மீண்டும் இயக்கும் வடகொரியா

அணு உலையை மீண்டும் இயக்கும் வடகொரியா

அணு உலையை மீண்டும் இயக்கும் வடகொரியா: வடகொரிய   அந்த நாட்டில் உள்ள யங்பியன் எனும் இடத்திலுள்ள அணு உலையை மீண்டும் இயக்கத் தொடங்கியுள்ளது என ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அணுசக்தி முகமை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படும் புளூட்டோனியம் அந்த அணு உலையில் தயாரிக்கப்படுவதாக நம்பப்படுகிறது. சர்வதேச அணுசக்தி முகமையின் உறுப்பினராக இருந்த வட கொரிய அரசு 2009ஆம் ஆண்டு நீக்கப்பட்டது.

எனினும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் வடகொரிய அணு உலைகள் தொடர்ந்து கண்காணிக் கப்பட்டு வருகின்றன.

அமெரிக்கா, தலிபான்கள், ஆப்கானிஸ்தான்: எதிர்காலம் இவர்களுக்கு எப்படி அமையப்போகிறது? – மொழியாக்கம்: ஜெயந்திரன்

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் முதல் இந்த அணு உலையில் இருந்து குளிர்ந்த நீர் வெளியேற்றப்படுவது இது அந்த அணு உலை இயக்கப்படுவதைக் காட்டுவதாகவும் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐ.நா-வின் சர்வதேச அணுசக்தி முகமை தெரிவிக்கிறது.

மேலும் இந்த அணு உலை மற்றும் ஆய்வகத்தின் மேம்பாடு ஆழமான பிரச்னைகளை உண்டாக்கக்கூடியது என்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கு எதிராக உள்ளதாகவும் சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு வட கொரியா இறுதியாக அணு ஆயுத சோதனை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku-Weekly-Epaper-145-August-22-2021

Leave a Reply