கை,கால்களை வெட்டும் கடுமையான தண்டனைகள் குறித்த தலிபான்களின் அறிவிப்புக்கு அமெரிக்கா கண்டனம்

424 Views

கடுமையான தண்டனைகள்

குற்றங்களில் ஈடுபடுவோரின் கை, கால்களை துண்டிப்பது போன்ற  தொடரும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தலிபான் அமைப்பை நிறுவியர்களுள் ஒருவர் முல்லா நூருதீன் துராபி அண்மையில் அளித்த பேட்டியில், “தலிபான்களின் முந்தைய ஆட்சியின் போது தவறு செய்பவர்களுக்கு மைதானத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதுவும் குற்றத்திற்கு ஏற்ப கை, கால்களை துண்டிக்கும் தண்டனைகள் வழங்கப்பட்டன.

நாங்கள் மைதானத்தில் தண்டனை அளிப்பதை அனைவரும் கேள்வி கேட்கின்றனர். நாங்கள் யாருடைய சட்டங்களையும், தண்டனைகளையும் கேள்வி கேட்டதில்லையே. எங்கள் சட்டம் எப்படியிருக்க வேண்டும் என்று எங்களுக்கு யாரும் சொல்லித்தரத் தேவையில்லை. நாங்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறோம். குரானின் அடிப்படையில் நாங்கள் எங்களின் சட்டத்திட்டங்களை வகுக்கிறோம்.

எங்களின் செயல்பாடுகள் நாங்கள் அமெரிக்கர்கள் போல் அல்ல என்பதைக் காட்டும்”  என மேலும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இது குறித்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ள அமெரிக்கா, தலிபான்கள் ஷரியத் சட்டத்தின் கீழ் மேற்கொண்டுள்ளோம் எனக் கூறி நிறைவேற்றும் தண்டனைகள் தெளிவாக மனித உரிமைகளை மீறுவதாக உள்ளன. தலிபான்களின் தண்டனை குறித்த அறிக்கை மட்டுமல்லாமல் அவர்களின் செயல்பாடுகளையும் நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். ஆப்கானில் உள்ள பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், குழந்தைகளின் நலன் காக்க நாங்கள் துணை நிற்போம்” என்று குறிப்பிட்டுள்ளது.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021

Leave a Reply