உலகின் முதல் கொரோனா மாத்திரைக்கு பிரிட்டன் அனுமதி

உலகின் முதல் கொரோனா மாத்திரை

உலகின் முதல் கொரோனா மாத்திரைக்கு பிரிட்டனின், மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களுக்கான ஒழுங்குமுறை ஆணையம் (The Medicines and Healthcare products Regulatory Agency MHRA) அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபியூடிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த  மாத்திரைக்கு மால்னுபிராவிர் (molnupiravir) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த மாத்திரை பிரிட்டனில் லேஜ்விரோ (Lagevrio ) என்ற பிராண்ட் பெயரில்  விற்பனை செய்யப்படவுள்ளது.

மெர்க் நிறுவனத்துடன் 4 இலட்சத்துக்கு 80 ஆயிரம் மாத்திரைகளை வாங்க பிரிட்டன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்குள் 2 கோடி மாத்திரைகளை உற்பத்தி செய்ய மெர்க் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகிறது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் பல  பயன்பாட்டில் உள்ள நிலையில் தற்போது அடுத்தக்கட்டமாக கொரோனா மாத்திரைகள் தயாரிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுவரை உலகம் முழுவதும் 5 பில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad உலகின் முதல் கொரோனா மாத்திரைக்கு பிரிட்டன் அனுமதி