சத்துருக்கொண்டான் படுகொலை – த. தே. ம. முன்னணியின் தேசிய அமைப்பாளரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு

சத்துருக்கொண்டான் படுகொலை


மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் தொடர்பாக முகநூலில் பதிவிட்டது குறித்து விசாரிக்க நாளை மட்டக்களப்பு  காவல் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சத்துருக் கொண்டானில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 32 வது நினைவேந்தல் கடந்த செட்டம்பர் மாதம் இடம்பெற இருந்த நிலையில் அங்கிருக்கும் நினைவேந்தல் தூபியில் விளக்கு ஏற்ற அனுமதிக்கப்படவில்லை. அது தொடர்பாக கிழக்கில் இவ்வாறு அதிகமான படுகொலைகள் நடந்துள்ளது இவற்றுக்கு நீதிவேண்டும் என தனது முகநூலில் பதிவு செய்துள்ளதாக தர்மலிங்கம் சுரேஸ் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான வாக்கு மூலம் ஒன்றை பெறவேண்டியுள்ளதால் நாளை சனிக்கிழமை மட்டக்களப்பு தலைமையக காவல் நிலைய சமூக காவல் பிரிவில் வருகை தருமாறு இன்று மட்டக்களப்பு நகரிலுள்ள தனது வீட்டுக்கு  காவல்துறையினர் வந்து கடிதம் ஒன்றை வழங்கியுள்ளனர் என தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

எனவே காவல்துறையினரின்  இந்த செயற்பாடு தொடர்பாக மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad சத்துருக்கொண்டான் படுகொலை - த. தே. ம. முன்னணியின் தேசிய அமைப்பாளரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு