கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுங்கள்- வங்கி ஊழியர்கள் போராட்டம்

கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுங்கள்

கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுங்கள் என வவுனியாவில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினரால் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு அருகாமையில் கண்டிவீதியில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்ததில் அரசாங்கத்தினை கைச்சாத்திட வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மேலும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு உடனடியாக தங்களது சம்பள பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அத்திய அவசிய வங்கிச்சேவைக்கு கூட்டு உடன்படிக்கைகள் தேவையில்லையா, கூட்டு உடன்படிக்கை போராட்டம் வெல்லட்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

IMG 1636105604410 கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுங்கள்- வங்கி ஊழியர்கள் போராட்டம்

அதே நேரம் அரச வங்கி ஊழியர் சங்கத்தினரால் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பிலும்  கவனயீர்ப்பு போராட்டம்  இடம் பெற்றன. ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுங்கள்- வங்கி ஊழியர்கள் போராட்டம்