“அனைவரும் திருடுவார்கள் என திருடன் நினைப்பான்” Pentagon அறிக்கைக்கு சீனத் துாதரகம் பதில்

அனைவரும் திருடுவார்கள் என திருடன் நினைப்பான்

இலங்கையில் இராணுவ தளம் ஒன்றை அமைக்க சீனா பரிசீலித்து வருகின்றது என அமெரிக்காவின் படைத் தலைமையகமான Pentagon  வெளியிட்ட அறிக்கைக்கு  “அனைவரும் திருடுவார்கள் என திருடன் நினைப்பான்” என்று  இலங்கைக்கான சீன துாதரகம் பதில் அளித்துள்ளது.

சீன மக்கள் குடியரசை உள்ளடக்கிய இராணுவம் மற்றும் பாதுகாப்பு அபிவிருத்தி என்ற தலைப்பில் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் இராணுவ தளம் ஒன்றை அமைக்க சீனா பரிசீலித்து வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் அமெரிக்க பாதுகாப்பு ராஜாங்க திணைக்களம் இராணுவம் மற்றும் பாதுகாப்பு அபிவிருத்திகளில் சீனாவின் தலையீடு என்ற பெயரில், வெளியிட்டிருந்த அறிக்கையில், சீனா உலகில் பல பாகங்களில் தனது இராணுவ பலத்தை உறுதிப்படுத்த முயற்சித்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் குறித்த அறிக்கைக்கு பதில் அளித்துள்ள இலங்கைக்கான சீன துாதரகம், அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்த தனது முகாம்களை அகற்றினாலும் நிதி, அரசியல், சமூகம் மற்றும் சுற்றாடல் போன்ற பல்வேறு முகாம்களை அமைத்து வருகிறது என்று தனது ட்விட்டரில் தளத்தில் சாடியுள்ளது.

அத்தோடு, “அனைவரும் திருடுவார்கள் என திருடன் நினைப்பான்” என்றும் குறிப்பிட்டுள்ளது.