திருச்சி சிறப்பு முகாம்: 30 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

249 Views

திருச்சி சிறப்பு முகாம் தொடரும் போராட்டம்

திருச்சி சிறப்பு முகாம் தொடரும் போராட்டம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இன்று 30 ஆவது நாளாக காலவரையின்றி காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டம் குறித்து, சிறப்பு முகாமில் உள்ள இலங்கை அகதிகள் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 11.08.2021முதல் உண்ணாநிலை போராட்டமாக ஆரம்பித்து

“கடந்த 11.08.2021முதல் உண்ணாநிலை போராட்டமாக ஆரம்பித்து தற்கொலை முயற்சி என பலவற்றை கடந்தும் உயரதிகாரிகள் எமக்கு ஒரு உறுதியான முடிவு எடுப்பதாக உறுதியளித்த நிலையில், அதற்கான பதில் வரும் வரை எமது காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

எமது கோரிக்கைகள் முழுமையாக தமிழக அரசிடம் சென்று அடையாத நிலையில்,  முதலமைச்சர் ஐயா மு.க ஸ்டாலின் அவர்கள் எமது நியாயமான கோரிக்கைகளை நேரடியாக தன்னுடைய தனி குழு மூலம் கேட்டறிந்து எமது குறைகளை தீர்த்து வைக்குமாறு தாழ்மையாக எமது காத்திருப்பு போராட்டத்தின் மூலம் கேட்டுக்கொள்கின்றோம்” என்றனர்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

1 COMMENT

Leave a Reply