திருச்சி சிறப்பு முகாம்: எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில் தொடரும் போராட்டம்

537 Views

திருச்சி சிறப்பு முகாம்: கடந்த பல மாத காலமாக திருச்சி சிறப்பு முகாமில் இருந்து  தங்களை விடுதலை செய்யக்கோரி  நடத்தி  வரும் போராட்டத்தில் இது வரையில் தமக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை என இலங்கை தமிழ் அகதிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி சிறப்பு முகாம்

அதன் காரணமாக தமது போராட்டம்  தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தற்கொலை  முயற்சிகள்  தொடங்கி உணவு தவிர்ப்புப் போராட்டம் வரை தாம் பல வடிவங்களில் போராட்டங்களை நடத்தியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

திருச்சி சிறப்பு முகாம்

இந் நிலையில்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரு    இலங்கைத் தமிழர்கள் தொடர்ச்சியாக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் மீதமுள்ளவர்கள் தொடர்ச்சியாக சிறப்பு முகாமில் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருவதாகவும் அகதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தமக்கான விடுதலை கிடைக்கும் வரையில் தாம் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறித்த அகதிகள் தெரிவித்துள்ளனர்.

1 COMMENT

Leave a Reply