ஆப்கானிஸ்தானில் போராட்டம் நடத்தி வரும் பெண்கள் மீது தலிபான்கள் தாக்குதல்

433 Views

பெண்கள் மீது தலிபான்கள் தாக்குதல்பெண்கள் மீது தலிபான்கள் தாக்குதல்: ஆப்கானிஸ்தானை தலிபன்கள் கைப்பற்றிய பிறகு, தற்போது அந்நாட்டிலுள்ள பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடத் தொடங்கினர். 

மேலும் வரும் நாட்களில் தலிபன்கள் ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அறிவிக்க உள்ளனர். எனவே புதிதாக அமையவிருக்கும் அரசில் தாங்களும் பங்கு பெற வேண்டும், தாங்கள் வேலை செய்வதற்கான உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என பெண்கள் இந்த போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,இந்த போராட்டத்தில் தலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆப்கான் ஊடகங்கள் தரப்பில், “ தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கும் அரசியல் உரிமை வேண்டும் எனக்கோரி இளம்  பெண்கள் காபூலில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட  பெண்கள் அதிபர் மாளிகையை நோக்கி செல்லவிடாமல் தலிபான்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் சமூக செயற்பாட்டாளரான நர்கிஸ் என்பர் காயமடைந்துள்ளார். மேலும் பேரணியை கலைக்க வானை நோக்கி துப்பாக்கியால் தலிபான்கள் சுட்டனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

அதே நேரம் பஞ்ஷிர் மாகாணத்தைக் கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடியதில் பொதுமக்கள் 17 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku-Weekly-Epaper-145-August-22-2021

1 COMMENT

Leave a Reply