இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை இந்திய அரசு மீட்க வேண்டும் – பேராசிரியர் இராமு மணிவண்ணன்

93 Views

கச்சத்தீவை இந்திய அரசு மீட்க வேண்டும்

கச்சத்தீவை இந்திய அரசு மீட்க வேண்டும்: இந்திய அரசாங்கம் கச்சத்தீவினை இலங்கை அரசாங்கத்திடமிருந்து திரும்பப்பெற வேண்டும் என்பதோடு, தமிழக அரசு கச்சத்தீவினை மீட்பது தொடர்பில் தீர்மானம் ஒன்றினை சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி சென்னை முதல் தனுஷ்கோடி வரை திட்டமிட்டு நடைபயணம் மேற்கொண்டிருந்த பேராசிரியர் இராமு மணிவண்ணன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தனது இந்த நடைபயணம் குறித்து  பேராசிரியர் இராமு மணிவண்ணன் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தி குறிப்பில்,

“நான் கச்சத்தீவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சென்னை முதல் தனுஷ்கோடி வரை 3.09.2021 முதல் 27.09.21 வரை தனிநபராக ஜனநாயக வழியில் நடைபயணம் செல்லத் திட்டமிட்டு இன்று (3.09.21) சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாட்டு பாதுகாப்பு, தமிழ்நாட்டு மீனவர்கள் நலன், இந்திய பாதுகாப்பு மற்றும் இறையாண்மை ஆகியவை தொடர்பான எனது நடைபயணத்தை தொடங்கிய சில மணித்துளிகளில் காவல்துறையால் அனுமதி மறுப்பு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டேன். தற்பொழுது ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு நடை பயணத்தின் அடுத்த கட்ட நகர்வுகள், நோக்கங்கள் போன்றவற்றை தெரிவிக்கவுள்ளேன்.

மேலும் குறித்த செய்தி குறிப்பினை முழுமையாக அறிய கீழ் உள்ள இணைப்பை அழுத்துங்கள்….
பத்திரிகைச் செய்தி

ilakku-weekly-epaper-144-august-22-2021

Leave a Reply