‘காபூலில் தாக்குதல் நடத்தியவர்களை மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம்’ – அமெரிக்கா

காபூலில் தாக்குதல் நடத்தியவர்களை

காபூலில் தாக்குதல் நடத்தியவர்களை: காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்களைக் குறிவைத்து வேட்டையாடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

காபூல் விமான நிலையத்தில் நேற்று நடந்த இரட்டை குண்டுவெடிப்புகளில் அமெரிக்க மீட்புப் படையைச் சேர்ந்த 12 பேர் உள்பட 90-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 150-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

மெரைன்ஸ் எனப்படும் அமெரிக்காவின் சிறப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த 11 பேரும் ஒரு கடற்படை மருத்துவர் ஒருவரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவதாக கூறப்படுகின்றது.

அமெரிக்கா, தலிபான்கள், ஆப்கானிஸ்தான்: எதிர்காலம் இவர்களுக்கு எப்படி அமையப்போகிறது? – மொழியாக்கம்: ஜெயந்திரன்

இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர்,

“இதை மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம். உங்களை வேட்டை யாடுவோம். பதிலடி கொடுப்போம்”

“பயங்கரவாதிகளால் அமெரிக்காவை ஒருபோதும் தடுக்க முடியாது” என மேலும் தெரிவித்துள்ளார்.

இரண்டு குண்டுவெடிப்புகளிற்கும் ஐஎஸ்ஐஎஸ்கே என்ற அமைப்பு உரிமை கோரியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ilakku-weekly-epaper-144-august-22-2021