மட்டக்களப்பில் கொரோனா தொற்று காரணமாக 201 பேர் பலி

 மட்டக்களப்பில் கொரோனா தொற்று

மட்டக்களப்பில் கொரோனா தொற்று: மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 209கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 08மரணங்களும் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இது வரையில் கொரோனா மரணங்கள் 201ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 300கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன் 05மரணங்களும் இடம் பெறுவதாகவும் இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும்  மயூரன் தெரிவித்தார்.

அத்துடன் இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 275000 தடுப்பூசிகள் பெறப்பட்டதாகவும் அதில் 2690100 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதே நேரம் மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந் தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதோடு பாதிக்கப் பட்டவர்களின் ண்ணிக்கை இதுவரையில் 1556 ஆக உயர்வடைந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று வரை 1571 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாகவும் 578 பேர் தொடர்ந்தும் சிகிச்சையில் உள்ளதாகவும் 15 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் இது வரைக்கும் 218 கொரோனா மரணங்கள் மொத்தமாக பதிவாகிய நிலையில், இம்மாதம் மட்டும் 69 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் டி.ஜீ.எம்.கொஸ்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றுத் தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன, கொரோனா பாதிப்பு மற்றும் மரணங்கள் குறித்த உண்மைத் தகவல்களையே ஊடகங்களுக்கு வழங்குகின்றோம்.” என்றார்.

ilakku-weekly-epaper-144-august-22-2021

Leave a Reply