கோட்டாபயவின் வரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கொட்லாந்து நாளேட்டில் விளம்பரம்

கோட்டாபய உங்கள் நகரத்திற்கு வருகிறார்


ஸ்கொட்லாந்து தேசத்தில் இருந்து வெளியாகும் பிரபல பத்திரிகையான, ‘த ஹெரால்’ (The Herald) என்ற பத்திரிகை, ‘இனப்படுகொலையாளி உங்கள் நகரத்திற்கு வருகிறார்’ என்ற செய்தியை முழுப் பக்கத்தில் பிரசுரித்துள்ளது.

மேலும் ஒரு இனத்தின் விடுதலையை நசுக்கிய இனப் படுகொலையாளி என்றும், ‘டேர்மினேட்டர்’ என்றும் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

காலநிலை மாற்றம் தொடர்பாக  வரும் 31ம் திகதி ஸ்கொட்லாந்து தலைநகர் கிளாசோவில் ஆரம்பமாகவிருக்கும் ஐ.நா உச்சி மாநாட்டில் (United Nations Climate Change Conference) கலந்துகொள்வதற்காக வருகைதர இருக்கும் சிறீலங்கா அரசதலைவர் கோட்டாபாய ராஜபக்சவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக புலம்பெயர் தமிழர்கள்  பெருமளவில்   ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று பிரபல ஸ்கொட்லாந்து ஆங்கில பத்திகை ஒன்றில் சிறீலங்கா அரச அதிபரின் வருகை பற்றி ‘டேர்மினேட்டர்’ கோட்டாபய உங்கள் நகரத்திற்கு வருகிறார் என்ற ஒரு விளம்பரச் செய்தி வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த பத்திரிகை உலகத்திலேயே மிக நீண்ட காலமாக வெளிவந்துகொண்டிருக்கும் ஒரு தேசிய பத்திரிகை என்பதுடன் உலகத்தில் பழமையான நாளிதழில் 8ம் இடத்திலும் இப்பத்திரிகை இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கொட்லாந்து நாட்டில் மிக அதிகமாக விநியோகிக்கப்படுகின்ற பெரிய தாள் பத்திரிகையில் இதுவும் ஒன்று. கோட்டாபய குறித்த பரபரப்புரை அச்சுப்பதிப்பிலும் இணைய தளத்திலும் சம காலத்தில் மேற்கொள்ளப்படுகின்றது.

ilakku Weekly Epaper 153 october 24 2021 Ad கோட்டாபயவின் வரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கொட்லாந்து நாளேட்டில் விளம்பரம்