இலங்கை ஏதிலிகள் சட்டவிரோத குடியேறிகளா? இந்திய அரசின் கருத்திற்கு இராமதாஸ் கண்டனம்

தமிழ் நாட்டில் வாழும் இலங்கை ஏதிலிகள் அனைவரும் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என மத்திய அரசு கூறியிருப்பது மனித நேயமற்றது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு ஏதிலிகளாக  தஞ்சம் கோரியுள்ள இலங்கை தமிழர்கள், தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணையில், “இலங்கையில் இருந்து தமிழ் நாட்டுக்கு வந்த அகதிகள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள். எனவே அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது” என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக மருத்துவர் இராமதாஸ்  வெளியிட்ட அறிக்கையில், “தமிழ் நாட்டில் வாழும் இலங்கைத் தமிழ் ஏதிலிகள் அனைவரும் சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் குடியேறியவர்கள் என்றும் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு மனித நேயமற்றது, ஏற்றுக் கொள்ள முடியாதது” என்று தெரிவித்துள்ளார்.

ilakku-weekly-epaper-140-july-25-2021